கறிவேப்பிலை வைத்து இதை செய்தாலே போதும்.. இளநரை மறைந்துவிடும்.

உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளன. அதையடுத்து கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதாலும், உணவில் சேர்த்துக் கொள்வதாலும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அதிகாலையில் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சம சீராகும். கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, நல்ல கொழுப்பை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கிறது.

கறிவேப்பிலையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. கறிவேப்பிலையை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள் நீங்குவதுடன் தலை முடி வளர்ச்சியில் மாற்றத்தைக் காண முடியும்.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து வெளியேறிவிடும்.

ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மூல நோயை விரைவில் போக்குவதிலும் மூலத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதில் கருவேப்பிலை சிறப்பாக செயல்படுகிறது. உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு சொரியாசிஸ் எனப்படும் தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு 15 கருவேப்பிலையை மென்று சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் அறவே நீங்கிவிடும். கருவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டால் விஷம் ஜந்துக்களின் கடியால் உடலில் பரவும் நஞ்சு முறியும். கருவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வெகு விரைவில் நீரிழிவு கட்டுப்படும்.