சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பட்டைய கிளப்பும் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் ஆதரவை பெற்றவர் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட்ல் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மாவீரன்’ படம் நேற்று (ஜூலை 14-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது

இந்த படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் ஒரு ஸ்பெஷல் வாய்ஸ் முன்னணி நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

இந்த படம் 2020-ஆம் ஆண்டு கொரியன் மொழியில் வெளியான ‘ஹிட்மேன் : ஏஜென்ட் ஜுன்’ (HITMAN : AGENT JUN) என்ற படத்தின் காப்பி என யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது, உலக அளவில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.11.60 கோடி என தகவல் கிடைத்துள்ளது.