சினிமா

அஜித் உடன் பைக் சவாரி செய்யும் மஞ்சு வாரியர் – வைரல் புகைப்படம்

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து வினோத் மீண்டும் அஜித்தை வைத்து ஏ கே 61 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது அவர் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பதை பட குழு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. ரொம்பவும் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் அவர் இந்த படத்தின் மூலம் பல விருதுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மஞ்சு வாரியர் அஜித்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. இமையமலை லடாக் பகுதியில் அவர் அஜித்துடன் இணைந்து பைக் சவாரி செய்திருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் அந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.