பிக்பாஸ்-6ல் முதல் ஆளாக களமிறங்கும் விஜே ரக்சன்.. வெளிவருமா உண்மை முகம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசனை எட்டியுள்ளது. விரைவில் தொடங்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜே ரக்சன் கலந்து கொள்ள இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே ஒரு செய்தி ஊடகங்களில் அடிபட்டு வருகிறது.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான ரக்சன் அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிகப் புகழ் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் அவரின் தன்னடக்கம், மற்றவரின் மீது எடுத்துக் கொள்ளும் தன்னலமில்லாத அக்கறை ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அது மட்டுமல்லாமல் அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் விஜய் டிவியிலேயே தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் மூலம் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அந்த வாய்ப்பை ரக்சன் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். விரைவில் ஆண்டவரை சந்திக்க தயாராகும் ரக்ஷனுக்கு இந்த வாய்ப்பு எந்த அளவுக்கு புகழை பெற்று தரும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பலரின் முகத்திரையையும் கிழித்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரக்ஷனின் உண்மை முகத்தையும் நமக்கு காட்ட இருக்கிறது. கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் இன்னும் சில சர்ச்சை பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.