நாம் அனைவரும் நாம் பிறந்த நட்சத்திர தினத்தன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நீண்ட நலமும், வளமும் உண்டாகும்.
நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்களோ அந்த நட்சத்திரம் வரும் நாளில் விடி்யற்காலையில் பால் அபிசேகம் செய்ய பால் கொடுத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
அப்படி செய்ய முடியாத கோயிலில் உதாரணமாக திருப்பதி போன்ற இடங்களில் தரிசனம் செய்தாலே போதும். முடிந்தவரை அங்குள்ள திருக்குளத்தில் குளியுங்கள், அங்குள்ள தல மரத்தை வலம் வாருங்கள்.
பிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள் நட்சத்திர அதிபதிகளும், பரிகார ஸ்தலங்களும்:
அசுவினி – சனீஸ்வரர் – திருநள்ளாறு (காரைக்கால் அருகில்)
பரணி – காளி – திருவாலங்காடு (அரக்கோணம் அருகில்)
கார்த்திகை – ஆதிசேஷன் நாகலிங்கம் – நாகநாதர் கோவில் (நாகப்பட்டினம்)
ரோகிணி – நாகநாதசுவாமி – திருநாகேஸ்வரம் (கும்பகோணம் அருகில்)
திருவாதிரை – சனீஸ்வரர் – திருக்கொள்ளிக்காடு (திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி)
புனர்பூசம் – தட்சிணாமூர்த்தி – ஆலங்குடி (கும்பகோணம் – நீடாமங்கலம்)
பூசம் – சனீஸ்வரர் – குச்சனூர் (தேனி அருகில்)
ஆயில்யம் – சனீஸ்வரர் – திருப்பரங்குன்றம் (மதுரை அருகில்)
மகம் – தில்லைக்காளி – சிதம்பரம்
பூரம் – ராகு பகவான் – திருமணஞ்சேரி (கும்பகோணம் அருகில்)
உத்திரம் – வாஞ்சியம்மன் – மூலனூர் (தாராபுரம் – கரூர் வழியில்)
அஸ்தம் – ராஜதுர்க்கை – திருவாரூர்
சித்திரை – ராஜதுர்க்கை – திருவாரூர்
சுவாதி – சனீஸ்வரர் – திருவானைக்காவல் (திருச்சி அருகில்)
விசாகம் – சனீஸ்வரர் – சோழவந்தான் (மதுரை அருகில்)
அனுஷம் – மூகாம்பிகை – திருவிடைமருதூர் (கும்பகோணம் அருகில்)
கேட்டை – அங்காள பரமேஸ்வரி – பல்லடம் (காங்கேயம் அருகில்)
மூலம் – தட்சிணாமூர்த்தி – மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
பூராடம் – தட்சிணாமூர்த்தி – திருநாவலூர் (பண்ருட்டி அருகில்)
உத்திராடம் – துர்க்கை தட்சிணாமூர்த்தி – தருமபுரம் (திருநள்ளாறு அருகில்)
திருவோணம் – ராஜகாளியம்மன் – தெத்துப்பட்டி (திண்டுக்கல் அருகில்)
அவிட்டம் – சனீஸ்வரர் நாகராஜன் – கொடுமுடி (கரூர் – ஈரோடு வழியில்)
சதயம் – சனீஸ்வரர் நாகராஜன் – திருச்செங்கோடு மலை கோவில்
பூரட்டாதி – ஆதிசேஷன் – காஞ்சிபுரம்
உத்திரட்டாதி – தட்சிணாமூர்த்தி சனீஸ்வரர் – திருவையாறு (தஞ்சாவூர் அருகில்)
ரேவதி – தட்சிணாமூர்த்தி சனீஸ்வரர் – ஓமாம்புலியூர் (சிதம்பரம் அருகில்)