Hair Care : நரை முடியை அடித்து விரட்ட வேண்டுமா? வாரத்தில் 2 நாள் மட்டும் தேச்சு குளிங்க!

முடி காடுபோல் வளரவேண்டுமா? இள நரை காணாமல் போக வேண்டுமா? தலைமுடி பட்டுபோல் ஜொலிக்க வேணடுமா? வாரத்தில் இரண்டு நாள் மட்டும் இதை தேய்த்து குளித்தால் போதும். தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். முடி கருமையாகும். முது நரையை தள்ளிப்போடும். இதோ இந்த குறிப்பை பின்பற்றுங்கள்

தலைமுடி பிரச்னைதான் நமக்கும் இருக்கும் தலையாய பிரச்னையாகும். அதை சரிசெய்வதற்குள் நமக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இயற்கையான முறையில் செய்யும்போது, அது நமக்கு எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்த இயற்கை முறைகளை நாம் தொடர்ந்து செய்தால்தான் பலன்கிட்டும்.

செயற்கை முறைகள் நமது உடலுக்கு கட்டாயம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே நாம் அதை தவிர்க்க சில இயற்கை முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். தலைமுடி பிரச்னைக்கு இதோ எளிய முறையில் வீட்டிலே செய்யக்கூடிய தீர்வு இதோ. பின்பற்றி பலன்பெறுங்கள்.

ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தலையில் பேன், பொடுகு, முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற தலை தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் சரிசெய்யும்.

தேவையான பொருட்கள்

உலர் நெல்லிக்காய் – ஒரு கைப்பிடியளவு

கற்றாழை – 4 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் என அனைத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

(கற்றாழையை கட்செய்து உள்ளே உள்ள ஃபிரஷ் ஜெல்லை ஸ்பூனில் வழித்து எடுத்துக்கொள்ள வேண்டும்) ‘

நெல்லிக்காய் பொடியைவிட உலர்ந்த நெல்லிக்காய் வற்றலை வாங்கி மிக்ஸியில் அரைத்து பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் பச்சை நெல்லிக்காயை வாங்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து, நிழலில் உலர்த்த வேண்டும். ஒரு வாரம் உலர்ந்தால் வற்றல் கிடைக்கும். அதை மிக்ஸியில் சேர்த்து பொடித்து பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டில் தயாரிப்பது நல்ல பலனைக்கொடுக்கும்.

கற்றாழை உடலுக்கு குளிர்ச்சியைத்தரும், தலை முடி, சருமம் என் அனைத்திலும் வறட்சியை போக்கும். முடி பட்டுபோல் ஜொலிக்கும்.

செய்முறை

கற்றாழை, நெல்லிக்காயை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக இவையிரண்டையும் பயன்படுத்தும்போது சிலருக்கு இருமல், சளி ஆகியவை ஏற்படும். அதை தவிர்க்க ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து அதை தட்டிச்சாறை பிழிந்துகொள்ள வேண்டும். இது தலையில் உள்ள அரிப்பை போக்கி, இறந்த செல்களை நீக்கும். எலுமிச்சை தலையில் அழுக்குகள் தேங்குவதை தடுக்கும். முடிக்கு ஊட்டமளிக்கும். தலைமுடிக்கு பளபளப்பைக் கொடுக்கும்.

அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து, இதை தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை நன்றாக அப்ளை செய்து, அரை மணி நேரம் நன்றாக ஊறவிடவேண்டும்.

பின்னர் ஷாம்பூ அல்லது சீயாக்காய் சேர்த்து தலையை அலசி, நன்றாக உலர விடவேண்டும். ஆயுர்வேத ஷாம்பூக்களும் பயன்படுத்தலாம்.

வாரத்தில் இதை கட்டாயம் இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். அப்போது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கட்டாயம் முயற்சி செய்யுங்கள்.