முள்ளங்கிய வச்சு வடை செய்யலாமா?.. வாருங்கள் பார்க்கலாம்

முள்ளங்கிய வச்சு இது வ்ரைக்கும் நாம சாம்பார் தான் செஞ்சு பார்த்துருப்போம். ஆனால் முள்ளங்கிய வச்சு வடை கூட பண்ணலாம். எப்படி செய்வது என்று பார்ப்போமா.

தேவையான பொருட்கள்:

1. கடலைப்பருப்பு – 1 கப்

2. முள்ளங்கி – 1/4 கிலோ

3. பச்சை மிளகாய் – 2

4. இஞ்சி – சிறு துண்டு

5. வெங்காயம் – 2

6. மல்லித்தழை – சிறிது

7. உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

1. கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

2. முள்ளங்கியைத் தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3. பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றையும் நறுக்கி வைக்கவும்.

4. பிறகு நறுக்கி வைத்த அனைத்தையும், ஊற வைத்த கடலைப்பருப்புடன் சேர்த்து முக்கால் பாகம் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5. ஒரு பாத்திரத்தில் அரைத்த வைத்திருக்கும் கலவையுடன் வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கி வடை போல் தட்டி வைக்கவும்.

6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நாம் தட்டி வைத்த வடைகளை நன்றாக வேகவைத்து எடுக்கவும்.

இப்போது நமக்கு சுவையான முள்ளங்கி வடை ரெடி. இந்த வடை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.