சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தியில் வழிபட வேண்டிய மந்திரங்களும், அர்ச்சனை முறைகளும்..

வினைகளை தீர்க்கும் விநாயகர் ஓம் என்ற ரூபத்தில் ஓங்கி நிற்கின்றார்.

முழு முதற் கடவுளான விநாயகரின் வழிப்பாடு  வெற்றிகளை குறிக்கும் என்பதால் எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் இவரை வணங்கி வேண்டிக்கொண்டால் அந்த செயல் சிறப்பாக இனிதே நடைபெறும்.

விநாயகரின் மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே

வரவரத ஸ்ர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !!

கணேச காயத்ரி மந்திரம் :

ஓம் தத் புருஷாய வித்மஹே

வக்ர தூண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு பின்னால் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்பட்டு வருகின்றது. அதாவது இந்நாளில் விநாயகருக்கு விரதமிருந்து, வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்களை தீர்த்து சகல நன்மைகளை பெற்றிட அருள் புரிவார். அருகம்புல்லை விநாயகருக்கு அருகே சென்று அர்ச்சனை செய்து வழிபட உங்கள் காரியம் சித்தியாகும். இந்த நன்னாளில் விநாயகருக்கு  21 மலர்கள், 21 இலைகள், 21அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும். வேண்டுதல்கள் பலிதமாகும்.

21 இலைகள் :

  1. பரூகதி என்னும் கிளா மரத்தின் இலை .
  2. அருக்கு இலை.
  3. ஊமத்தம் இலை.
  4. வில்வ இலை.
  5. துளசி இலை.
  6. இலந்தை இலை.
  7. நாயுருவி இலை.
  8. தங்க அரளி செடியின் இலை.
  9. மாவிலை.
  10. விஷ்ணு கிரந்தி.
  11. நொச்சி இலை.
  12. மாதுளை இலை.
  13. நுன்னா இலை.
  14. தேவகாரு இலை.
  15. நெல்லி இலை.
  16. மருவு இலை.
  17. ஜாதிக்காய் இலை.
  18. வன்னி இலை.
  19. அரச மர இலை.
  20. எருக்கை இலை.
  21. மாசி இலை.

21 மலர்கள் :

  1. புன்னை மலர்.
  2. மந்தாரை மலர்.
  3. சம்பங்கி மலர்.
  4. மகிழம் மலர்.
  5. பாதிரி மலர்.
  6. அரளி பூ.
  7. ஊமத்தம் பூ.
  8. மாம் பூ.
  9. முல்லை பூ.
  10. தாழம் பூ.
  11. கொன்றை பூ.
  12. செங்கழுனீர் மலர்.
  13. செவ்வரளி பூ.
  14. வில்வ மலர்.
  15. குருந்தை பூ.
  16. ஜாதி மல்லி.
  17. பவழ மல்லி.
  18. மாதுளை பூ.
  19. கண்டங்கத்திரி பூ.
  20. எருக்கம் பூ.
  21. தும்பைப்பூ.

இந்த 21 மலர்களும்,21 இலைகளும் நமக்கு எளிதாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை கொண்டு விநாயகரை விரதமிருந்து அர்ச்சனை செய்து வழிபாட்டு வந்தால் சகல நன்மைகளும் பெறலாம். விநாயகருக்கு முக்கிய வழிபாடுகளில் ஒன்று சிதறு காய் வழிபாடு. எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கும் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து தொடங்கினால் காரியம் கைகூடும்.