இறால் தொக்கு செய்ய இந்த பொருள்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

இறால் தொக்கு செய்ய இந்த பொருள்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

கடல் உணவுகள் என்றாலே உடனே நமக்கு ஞாபகம் வருவது மீன் வருவல், இறால், நண்டு மற்றும் கடம்பான் தொக்கு.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகவும் மற்றும் எளிதாக சாப்பிடக்கூடிய ஒரு வகை கடல் உணவு தான் இறால் தொக்கு.

உங்களில் பலருக்கு இறால் பிடிக்கும் ஆனால் இதை சாப்பிட்டால் அதிக வாய்வுத் தொல்லை ஏற்படும் மற்றும் உடல் சூடு உண்டாகும். அதனால் அதை உணவில் இருந்து ஒதுக்கி விடுவீர்கள்.

தொக்கு இல் சிறிதளவு வெந்தயம் சேர்ப்பதால் இறாலால் ஏற்படும் உடல் சூடு குறையும் மற்றும் மிளகு சேர்ப்பதால் உடலில் கொழுப்பு சேராது.

கருவேப்பிலை , மஞ்சத்தூள் சேர்ப்பதால் இறாலில் வரும் கவுச்சிவாசனை வராது.

மிகவும் முக்கியமாக ஐந்து-ஆறு பல் பூண்டை சேர்ப்பதால் வாய்வு தொல்லை இருக்காது.

குறைந்த நேரத்தில் மிகவும் எளிமையாக இறால் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

இறால்-¼ கிலோ
பெரிய வெங்காயம்-3
தக்காளி-2
வெந்தயம்-1 டீஸ்பூன்
மிளகு-1 டீஸ்பூன்
கடுகு-¼ டீஸ்பூன்
கருவேப்பிலை-சிறிதளவு
மிளகாய் தூள்-2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள்-1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு.

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அவற்றில் சிறிதளவு கடுகு சேர்த்து பொரிந்த உடன் வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

வெந்தயம் நிறம் மாறியவுடன் மிக்ஸியில் வெங்காயம் , பூண்டு சிறிதளவு மிளகு சேர்த்து அரைக்கவும், தக்காளியையும் அரைக்கவும்.

ஒன்னுக்கு பின்னாக அரைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். வதைக்க உடன் இறாலை சேர்க்கவும். பிறகு உப்பு, காரத்துக்கு ஏற்ப மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.

தேவைக்கேற்ப வெந்நீரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கினாள் சுவையான இறால் தொக்கு சாதம் ,சப்பாத்தியுடன் சாப்பிட ரெடி ஆகிவிடும்.