அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் ஏ கே 61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஏ கே 61 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் எப்போது தான் வெளியாகப் போகிறது என்று நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இன்று சரியான நாளாக அமைந்துள்ளது.
அவர்கள் அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய விரைவில் வெளியாக உள்ளது என்று தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் வெளியாகாததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
அந்த வகையில் இன்று மாலை ஏ கே 61 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது என்ற தகவல்களும் வெளியானது. இதனால் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வந்த ரசிகர்கள் மிகுந்த எதிபார்ப்புடன் மாலை 6 மணியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
மேலும் படத்தின் தலைப்பு துணிவு என்ற ஒரு ஒரு செய்தியும் வைரலான நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே வந்த செய்திகளின்படி துணிவு என்ற தலைப்பில் அட்டகாசமாக பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
அந்த போஸ்டரில் அஜித் வயதான லுக்கில் அதாவது வெள்ளை தலைமுடி, தாடியுடன் சேரில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு கையில் துப்பாக்கியுடன் இருக்கும் படியும் அந்த போஸ்டர் இருக்கிறது. இதை பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஆக்சன் மிரட்டல் ஆகத்தான் இருக்கும் என்று தெரிகிறது.
தற்போது இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை இப்படி ஒரு லுக்கில் பார்த்த ரசிகர்களுக்கு தலைகால் புரியவில்லை. தற்போது துணிவு படத்தின் போஸ்டர் ட்விட்டரில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
Also read: சர்ச்சை இயக்குனரை டீலில் விட்ட டாப் ஹீரோக்கள்.. ஆதரவு கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்