உறங்கும் போது பாகங்களை பாதிக்கிறதா புற்றுநோய் செல்கள்?.. ஓர் அதிர்ச்சி தகவல்

தூங்கும்போது அதிக வீரியத்துடன் புற்றுநோய் செல்கள் பரவுகிறதென்ற கருத்து சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. அது எந்த அளவிற்கு உண்மையானது என இக்கட்டுரையில் காண்போம்.

புற்றுநோய் என்று ஒன்று வந்துவிட்டாலே அவ்வளவுதான் நாம் இறந்துவிடுவோம் என்ற எண்ணம் மிக பரவலாக நம்மிடத்திலேயே காணப்பட்டது. தற்போது அந்த எண்ணம் சற்றே தணிந்துள்ளது, காரணம் மருத்துவ உலகில் நேர்ந்துள்ள கண்டுபிடிப்புகள். ஒவ்வொரு முறை மருத்துவ உலகில் கண்டுபிடிப்புகள் நேரும்போதும் அது மனித உலகுக்கே பெரும் நிம்மதியை தரக்கூடியதாக உள்ளது.

அதே வேளையில் கண்டுபிடிப்புகள் நேரும் முன்பு வெளிவரும் நோய்களைப் பற்றிய ஆய்வறிக்கையானது பெரும்பாலும் திகில் ஊட்டக் கூடியவையாகத்தான் இருக்க செய்கிறது. தற்போது அப்படியான ஒரு ஆய்வறிக்கைதான் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையானது பலரிடத்திலும் திகிலை உண்டு செய்துள்ளது.

ஆம், தற்போது வெளிவந்துள்ள ஒரு ஆய்வறிக்கையின்படி மார்பக புற்றுநோயானது உறங்கும் போது அதிகமாக பரவக்கூடியதென்று தெரிய வந்துள்ளது. உறங்கும் அனைவருக்கும் இந்த பரவல் பொருந்தாது. ஏற்கனவே மார்பக புற்றுநோய் உள்ள ஒருவர் உறங்கும் சமயத்தில், அவரிடத்தில் உள்ள புற்றுநோய் செல்களானது அதே நபரின் உடலின் மற்ற பாகங்களுக்கு அதிக அளவில் பரவுவதாக தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் செல்களை எலிகளில் செலுத்தி சோதனையிட்ட ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் செல்கள் பரவுவதலின் வேகத்தைக் கணக்கீட்டனர். அதன்படி, உறங்கா இருக்கும் சமயத்தில் ஏற்படும் பரவல் விகிதத்தை விட உறங்கும் சமயத்தில் உள்ள எலியல் பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனை சார்ந்தே இன்னும் பற்பல சோதனைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், பிற புற்றுநோய் செல்களை கொண்டும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதோடு முழுவதுமாக ஆராய்ச்சி முடிந்தப்பின்பே முழுத்தகவலையும் கூற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் அனைத்து புற்றுநோய் செல்கள் குறித்தும் நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது. தற்போது வரையில் மேற்சொன்ன ஆய்வறிக்கையானது மார்பக புற்றுநோய் செல்களுக்கு மட்டுமே பொருந்தும்.