கஷ்டங்களை மறக்க வைக்கும் குழந்தைகளின் சிரிப்பு.. அறிவியல் சார்ந்த ஓர் ஆய்வு

உலகில் பலருக்கு பிடித்தமான ஒரு உயிர் என்றால் பெரும்பாலும் அது குழந்தைகள்தான்.

வாஞ்சையாக விளையாடுவதில் ஆரம்பித்து அவர்களை வேண்டுமென்றே அழ வைப்பது வரை குழந்தைகளுடன் பல வயதினரும் விளையாடுவார்கள், விளையாட விரும்புவார்கள்.

அப்படியான குழந்தைகளிடம் நகைச்சுவை உணர்வு முதல் நான்கு வருடத்தில் எப்படியெல்லாம் உருமாறுகிறது என்று லண்டனில் உள்ள பிரிஸ்டால் பல்கலைகழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

பிரிஸ்டால் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை 700 குழந்தைகளிடம் மேற்கொண்டது. மேலும் நகைச்சுவை சார்ந்து 20 கேள்விகளை ஆராய்ச்சி குழுவினர் தயார் செய்தனர்.

அக்கேள்விகளை பிறந்த ஒரு மாத கைக்குழந்தையில்  இருந்து நான்கு வருட குழந்தைகளை கொண்ட 671 பெற்றோர்களிடம் கேட்டனர். மேலும் ஐந்து நிமிட கால அளவில், குழந்தைகளிடம் நகைச்சுவை உணர்வு சார்ந்து ஆராய்ச்சியாளர்கள் நேரத்தை செலவிட்டனர்.

இவ்வாறாக ஆய்வுகளை மேற்கொண்ட பிரிஸ்டால் பல்கலைகழகம் அதை முடித்தப் பின்பு அதன் தகவல்களை அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, முதல் மாதத்தில் குழந்தைகள் நகைச்சுவையை புரிந்துகொண்டு பாராட்டுகின்றன .

இரண்டு மாதங்களுக்குள் 50% குழந்தைகள் நகைச்சுவையைப் பாராட்டினர், 50% பேர் பதினொரு மாதங்களில் நகைச்சுவையை உருவாக்கினர். குழந்தைகள் நகைச்சுவையை உருவாக்கியவுடன், அவர்கள் அதை அடிக்கடி செய்தார்கள் எனவும் அதில் தெரிவிக்கபப்ட்டிருந்தது.

மேலும் இப்போது கடந்த மூன்று மணி நேரத்தில் உலகின் பாதி குழந்தைகள் நகைச்சுவையை அவர்கள் பாணியில் செய்திருப்பர் என்கின்றனர்.

குழந்தைகள் தனது முதல் வயதில் நகைச்சுவயை புரிந்துக்கொண்டு அதற்கு தங்கள் பாணியில் பதிலளிக்கிறார்கள் எனவும் மேலும் நகைச்சுவையை நீடிக்க செய்கிறார்கள் எனவும் அதில் இருக்கிறது.

இரண்டாம் வயதில் குழந்தைகளின்  நகைச்சுவையானது, தவறாகப் பெயரிடுதல், பொருட்கள் மற்றும் உயிரனங்களுடன் விளையாடுதல் போன்றவற்றில் இருந்ததையும் அதோடு மொழி வளர்ச்சியைப் பிரதிபலித்ததையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் குழுவில் உள்ள ஆக்ரோஷமான நகைச்சுவையையும் பாராட்டுகிறார்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.

மூன்றாவது வயதில் குழந்தைகள் , சமூக விதிகளுடன் விளையாடுவதைக் கண்டறிய தொடங்கினர். மேலும் குறும்பு வார்த்தைகளை வேடிக்கையாகச் சொல்வது மற்றும் தந்திரங்கள் மற்றும் சிலேடைகளைப் புரிந்துகொள்வதற்கான தொடக்கத்தையும் அவர்கள் அவ்வயதில் பெற்றிருகின்றனர் என தெரிவிக்கின்றது ஆய்வறிக்கை.

நகைச்சுவை என்பது வாழ்க்கையின் முதல் நான்கு ஆண்டுகளில் ஒரு சிக்கலான வளரும் செயல்முறை என்பதை இந்த  முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வாழ்க்கையின் உலகளாவிய தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நகைச்சுவை முதலில் எவ்வாறு உருவாகிறது என்பதை தீர்மானிக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்வது முக்கியம்.

இந்த ஆராய்ச்சி நகைச்சுவை எவ்வாறு உருவாகிறது என்பதை மட்டும் கண்டறியாமல் அவை குழந்தைகளுக்கு  அறிவாற்றல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் மன ஆரோக்கியத்தின் அடிப்படையிலும்  எப்படி உதவுகின்றன என்பதையும் கண்டறியவும் உதவும் என்று முன்னணி எழுத்தாளர் டாக்டர் எலினா ஹொய்க்கா கூறியதாக பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மேற்கோள் காட்டியது.

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை கண்டிப்பாக படியுங்கள் உதவும்!