நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்ப்பதில்லை தெரியுமா?.. அறிவியல் சொல்லும் காரணங்கள்.

ஜோதிடத்தில் கிரகங்களின் ஒளிக்கதிர்கள் ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்தின் மீது படுவதையே கிரக பார்வை என்கிறோம். உதாரணமாக, பூமி சூரியனின் நேரடிப் பார்வையில் இருப்பதால் தான் சூரிய ஒளியானது தொடர்ந்து பூமியின் இரு பக்கங்களிலும் மாறி மாறி இரவு- பகலாக வந்தடைந்து கொண்டே இருக்கிறது.

பூமியை சூரியன் பார்ப்பதால்தான் உயிர்கள் வாழ முடிகிறது. அதுவே செவ்வாய் பூமியை நெருங்கி அதிக கிரகணங்களை வெளிப்படுத்தினால் அது இயற்கை சீற்றத்திற்கு வழிவகுத்து பூமிக்கு பாதிப்பு ஏற்படும். வெகு தூரத்தில் இருந்தபடி குரு பூமியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் தான் ஒவ்வொரு அழிவில் இருந்தும் பூமி தப்பிக்கிறது.

இங்கே உயிர்கள் உற்பத்தி ஆகிறது. அதைவிட பூமியைத் தாக்க வேண்டிய விண்கற்களைக் கூட வியாழன் வாங்கிக் கொள்கிறார். பூமியை சுற்றியே அனைத்து கிரகங்களும் காணப்படுகிறது. சூரியன் – சனி இவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவே பிடிக்காது. இரண்டு கிரகங்களின் தன்மை என்பது முற்றிலும் வேறுபட்டது. இதே போல் செவ்வாய்- புதன், சனி – செவ்வாய், சனி – சந்திரன் போன்ற கிரகங்கள் பார்த்தாலும் அது உலகத்திற்கு நன்மையல்ல.

ஜாதகருக்கும் நன்மை அல்ல. மேலும் உச்ச கிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தாலும் அல்லது பார்க்க நேரிட்டாலும் அவ்வளவுதான். அதற்கு உதாரணமாக ஸ்ரீராமர் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்றால் தான் அவர் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் குறைவு. ஜோதிட சூத்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்கள் அனைத்தும் ஒருவரையொருவர் பார்க்க வாய்ப்பே இல்லை.

இயற்கை அதனை அனுமதிக்கவும் இல்லை. ஏனெனில் ராகுவும் கேதுவும் பார்வையற்ற கிரகங்கள் அவற்றின் ஒளியே இல்லை. அதை தவிர்த்து வெளியில் மற்ற 7 கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும் நிலை ஏற்பட்டால் இந்த உலகம் மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். சில சமயங்களில் கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசயம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்தாலும் பூமிக்கு நன்மை கிடைக்காது.