புதுமனை புகு விழாவிற்கு மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன் அறிவியல் காரணம்?

நம்முடைய முன்னோர்கள் புதுமனை கட்டி முடித்து அதற்கு புகு விழா நடத்தும் போது மாவிலைத் தோரணம் கட்டுவது வழக்கம். இதனை நாம் இன்றும் பின்பற்றி வருகின்றோம். பால் காய்ச்சும் வீட்டிற்குள் செல்லும் போது,நம்மை முதலாவதாக வரவேற்பது வாசலில் கட்டியிருக்கும் மாவிலைத் தோரணங்கள்.

புது வீட்டிற்கு மட்டுமல்லாமல், நாம் இறைவனை வழிபாடு  செய்யக்  கூடிய பூஜை நேரங்களிலும் மாவிலைத் தோரணங்களைப் பயன்படுத்தி வருகின்றோம்.  இந்த பயன்பாட்டிற்கு பின்னாலுள்ள உண்மைகளை பண்டைக் காலத்திலேயே அறிந்திருந்ததனால் இந்த வழக்கம் இன்றும் உள்ளது.

மக்கள் அதிகம் பேர் கூடக்கூடிய இடங்களில் வாயு அசுத்தமாவது இயற்கை. அந்த அசுத்த காற்றை சுத்தம் செய்ய மாவிலைக்கு இயலுமாம். அதற்காகவே மாவிலைகளை தோரணங்களாக  வீடுகளில் கட்டுகிறார்கள். இப்பொழுதெல்லாம் இதற்கு பதிலாக மாவிலை வடிவில் பிளாஸ்டிக் இலைகளை சிலர் கட்டுவதுமுண்டு. ஆனால் இதனால் பயனேதுமில்லை என்பதே உண்மை. மாவிலைக்கு நோயணுக்களின் சக்தியை அழிக்க இயலும் என்பதால் நம் முன்னோர்கள் மாவிலையால் பல்துலக்குவதுண்டு.

கிணற்றை சுத்தம் செய்ய இறங்கும் போது கிணற்றிலுள்ள அசுத்த  வாயுவில் சிக்கி மூர்ச்சையாகும் நிகழ்வுகளை நாம் அறிந்துள்ளோம். ஆனால் நம்முடைய பண்டைய மக்கள் ஆழமான கிணற்றில் இறங்குவதற்கு முன் மாமரத்தின் ஒரு கிளையை ஒடித்து கயிற்றில் கட்டி கிணற்றில் இறக்கி சுழற்றிய பின் வெளியில் எடுத்தால் சுத்த வாயு கிடைக்கும் என்று, அங்கேயும் மாவிலைகளை பயன்படுத்தி வந்தார்கள்.