இறால் முட்டை மசாலா செய்வது எப்படி?

அசைவம் பிடிக்காதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அசைவ பிரியர்களுக்கு மிகவும் எளிதாக செய்யக்கூடிய இறால் முட்டை மசாலா இதோ உங்களுக்காக

தேவையான பொருட்கள்

பட்டை, கிராம்பு சிறிதளவு
இறால் கால் கிலோ
முட்டை இரண்டு
பெரிய வெங்காயம் ஒன்று
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மல்லித்தழை சிறிதளவு

செய்முறை

இறாலை சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.

பின்னர் அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

5 நிமிடங்களுக்கு பிறகு மிதமான சூட்டில் வேக வைத்த இறாலை அத்துடன் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.

பிறகு முட்டையை உடைத்து அதில் ஊற்றி நன்றாக வதக்கவும். அதன் பிறகு அதன் பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் ஆகியவை சேர்க்க வேண்டாம்.

மிதமான சூட்டில் சிறிது நேரம் மூடி வைக்கவும். எண்ணெய் நன்கு பிரிந்து வந்த உடன் மல்லித்தழை தூவி இறக்கி விடவும்.