அழகு குறிப்புகள் அதிகம் கொண்ட ஆப்பிள்.. இதை வீட்டில் செய்து பாருங்கள்

ஆப்பிள் உடல் நலத்திற்கு நல்லது என புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்களில் இதுவும் ஒன்று.

இதில் நிறைய வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. அதுபோலவே நம் சருமத்திற்கான அழகு குறிப்புகள் ஆப்பிளிடம் நிறைய இருக்கிறது. அவை சருமத்தில் நிறைய நல்ல மாற்றங்களை உண்டாக்கும். முகத்தில் உள்ள சுருக்கங்கள், கருமையைப் போக்கி மினுமினுப்பை அள்ளித் தரும்.

ஆப்பிளை அரைத்து பேக்காக முகத்தில் போடுவதால் உண்டாகும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். சருமம் வறண்டு காணப்படும் சமயங்களில் ஆப்பிளை மசித்து அதனுடன் சில துளி கிளிசரின் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் வறட்சி காணாமல் போய் சருமம் மினுமினுக்கும்.

சருமத்தில் வெயிலினால் ஏற்படும் கருமையை தடுக்கும் சுவராக ஆப்பிள் செயல்படும். ஆப்பிள் சாறு எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவி காய்ந்ததும் கழுவி விடலாம்.
இதில் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றும். கருமையை அகற்றும். ஆப்பிளில் நிறைய ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது.

இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது. முகத்திற்கு வாரம் ஒருமுறை ஆப்பிள் பேக் போட்டால் முகம் இளமையாக இருக்கும். நீங்கள் திடீரென ஏதாவது விழாவிற்கு அல்லது குழு நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டுமானால் அந்த சமயங்களில் ஆப்பிள் கைகொடுக்கும். ஆப்பிள் சாறு மற்றும் மாதுளை பழச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தில் உடனடியாக அழகு மிளிரும்.

Also read: முகத்தில் எண்ணெய் வடிகிறதா?.. எப்படி சரி செய்வது