திருமணத்தில் அர்ச்சதை அரிசியில் போடுவது ஏன்?

திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்கள நிகழ்ச்சி என்றாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு பரிபூரணமாக கிடைக்கிறது. முனை முறியாத அரிசிக்கு பெயர்தான் அர்சதை.

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு அடியில் விளைவதும் மங்களங்களை கொடுப்பதும் மஞ்சள், இவ்விரண்டையும் இணைத்திடும் தூய பசு நெய். இந்த மூன்று மங்களப் பொருட்களின் கூட்டணி தான் அட்சதை.

இதனை தூவி ஆசீர்வதிக்கும் போது ஆசீர்வாதம் பெறுபவருக்கு அனைத்து விதமான மங்களமும் ஏற்படும் என்பது ஐதீகம். திருமண நிகழ்ச்சிகளில் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அர்ச்சனை தூவி ஆசி வழங்குவதை சரியான முறையாகும்.

அதை விடுத்து கும்பலோடு, கும்பலாக அச்சதை வீசுதல் கூடாது. மங்கள நிகழ்ச்சிகளில் அர்ச்சனை தூவி ஆசி வழங்குவது எதற்காக என்றால், மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான உணவை வழங்கும் அரிசி போல், இந்த சமூகத்தில் அனைவருக்கும் உன்னால் அல்லது உங்களால் நன்மை கிடைக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துவதற்காகத் தான் அவ்வாறு செய்யப்படுகிறது.

ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் தெரியாமல் பலரும் ஏதோ எல்லோருக்கும் செய்கிறார்கள் அதனால் நாமும் செய்வோம் என்று தான் செய்கின்றனர். அதை விடுத்து, இனி வருங்காலங்களில் மங்கள நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் நீங்கள் கலந்து கொள்ளும் போது அர்ச்சனை தூங்குவதன் அர்த்தம் புரிந்து வாழ்த்தி பாருங்கள். அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் கிடைக்கும். வாழ்த்து பெறுபவருக்கும் கிடைக்கும்.