ஞாயிறு
வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையில், எல்லாம் வல்ல சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்ல பலங்களைத் தரும்.
ஞாயிறு அன்று சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால், தீராத நோய்கள் குணமாகும். உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும்.
ஞாயிற்றின் அதிபதி அக்னி பகவான் என்பதால், அவரை வணங்கும் விதமாக காலையில் சூரிய வழிபாடு செய்வது நல்லது.
இப்படி வாரந்தோறும் வழிபாடு செய்து வந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
திங்கள்:
திங்கள் அன்று அம்மனையும் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்து வந்தால் எல்லா விதமான நன்மைகளையும் பெறலாம்.
குறிப்பாக, மனதார அம்மனை நினைத்து வழிபட்டால், நிச்சயம் பெண்களுக்கு கல்யாணம் நடக்கும்.
விநாயகருக்கு பிடித்த, மாம்பழம், லட்டு, வெற்றிலை பாக்குடன் தேங்காய், வாழைப்பழம், அவல் போன்றவற்றை வைத்து மனதார விநாயகனிடம் எது கேட்டாலும் கிடைக்கும்.
அது மட்டுமின்றி, நீங்கள் எடுக்கும் நல்லா முயற்சிகளுக்கு இவரை துதித்துவிட்டு, தொடங்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
செவ்வாய்:
செவ்வாய் கிழமைகளில், அப்பன் முருகனை வழிபாடு செய்துவந்தால், வாழ்வில் நல்ல பயன்கள் நடைபெறும்.
குறிப்பாக, தொழிலில் நல்ல முன்னேற்றம், குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைக்கும்.
முடிந்தால், கந்தசஷ்டி கவசம் படிக்கவோ கேட்கவோ செய்தால் எதிரியின் தீய எண்ணங்கள் அகன்று விடும். எதிரிகள் உங்களுடன் நட்பு பாராட்டுவர்.
Also read: தீராத கடன் பிரச்சனையா.? இந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடுங்க
புதன்:
புதன் கிழமைகளில், கருட பகவான், சரஸ்வதி, அம்பிகை வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
அதோடு, வடக்கு பக்கம் திரும்பி குபேர வழிபாடு செய்து வந்தால் செல்வம் பெருகும். வீட்டில் நற்காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
வியாழன்:
வியாழ கிழமைகளில், குரு பகவான் வழிபாடு செய்து வந்தால் நல்ல பயங்களைப் பெறலாம்.
அதோடு, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், ராகவேந்திரர் போன்ற கோவிலுக்கு சென்று இந்நாளில் வழிபடுவதால், மனதிற்கு அமைதி கிடைப்பதோடு வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
வெள்ளி:
வெள்ளி கிழமைகளில், மகாலக்ஷ்மி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் நன்மைகள் பெருகும். செல்வம் நிலைக்கும்.
கல்யாண வயதுடைய பெண்களுக்கு திருமணம் நடைபெறும். இதே நாளில், அஷ்ட லசுமிகளையும் வழிபாடு செய்துவர, வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் எப்போதும் இருக்கும்.
இடம், வீடு, பொருள், ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்க லஷ்மி வழிபாடு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால், கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்.
Also read: அமாவாசை தினத்தில் நாம் பின்பற்ற வேண்டிய முறைகள்.. கர்மவினைகளுக்கு செய்யும் பரிகாரம்
சனி:
சனி கிழமைகளில், பெருமாள் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
சனிபகவான் விஷ்ணு பகவானின் பக்தன் என்பதால், சனி நாட்களில் விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
துளசி மாலை சாற்றி பெருமாளை வழிபாடு செய்வதின் மூலம் நீங்கள் மனதார வைக்கும் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும்.
எந்நாளும் எல்லா தெய்வங்களும் நலன் தரும். இருப்பினும், அந்தந்த தெய்வத்திற்கு உரிய நாளில் வழிபாடு செய்தால் கூடுதலான பலன்களையும் அனுகூலமான நன்மைகளையும் பெறலாம்.
1 Comment