பாத்திரத்திற்கேற்ப நீரின் தன்மை மாறுபடுமா?.. முன்னோர்கள் கண்டுபிடித்த ரகசியம்

பொதுவாக நம் வீடுகளில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதற்கு வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரத்தை தான் பயன்படுத்துவோம்.

ஆனால் சில பாத்திரங்களில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்பவும் நீரின் தன்மையும் மாறுபடுகிறது.

இது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ஆனால் இது தான் உண்மை. பண்டைய காலங்களில் மண் பானைகளில் தான் நம் முன்னோர்கள் சமைத்து சாப்பிடுவார்கள். இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் பார்த்திருப்போம்.

சமீபகாலமாக இந்த மண் பானை சமையலை நாம் விரும்பி சமைக்க ஆரம்பித்துள்ளோம்.

ஆனால் அந்தக் காலங்களில் அரசர்கள் தங்க கிண்ணங்களில் நீரை ஊற்றி வைத்து பயன்படுத்தினார்கள். அதே போல மிகப் பெரிய செல்வந்தர்கள் வெள்ளிப் பாத்திரங்களில் நீரை ஊற்றி வைத்து அதைத்தான் குடித்து வந்தார்கள்.

அதன் மூலம் நல்ல உடல் நலத்தையும் அவர்கள் பெற்றார்கள். எந்த பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து நாம் குடித்தால் நமக்கு எந்த வகையான நன்மை கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காண்போம்.

தங்கப் பாத்திரம்:

கொதிக்க வைத்த நீரை இந்த தங்கப் பாத்திரத்தில் ஊற்றி வைத்து ஆறியதும் நாம் அதை அருந்த வேண்டும். இதன் மூலம் வாதம், கபம், சுவையின்மை போன்ற பல பிரச்சினைகள் தீரும்.

அத்துடன் உடல் சூடு தணியும் நம் மூளையும் அதிக சுறுசுறுப்பு பெறும். இதைத்தான் அரசர்கள் அந்த காலத்திலேயே பயன்படுத்தி வந்தார்கள்.

வெள்ளி பாத்திரம்:

காய்ச்சிய நீரை இந்த வெள்ளி பாத்திரத்தில் ஊற்றி வைத்து நாம் குடித்து வந்தால் வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உடல் சூடு, தாகம், பித்தம் போன்ற பல பிரச்சினைகளுக்கும் இது தீர்வு கொடுக்கும்.

இதனால் உடலும் வலுப்பெறும். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஆஸ்துமா, இருமல் போன்ற பலவற்றுக்கும் இந்த வெள்ளி பாத்திரத்தின் மூலம் குடிக்கும் நீர் நல்லது.

செம்பு பாத்திரம்:

இந்தப் பாத்திரத்தில் காய்ச்சிய நீரை வைத்து குடித்து வந்தால் கண் புகைச்சல், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், பைல்ஸ் போன்ற பல பிரச்சினைகளில் இருந்து நமக்கு தீர்வு கிடைக்கும்.

அத்துடன் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கும் இதன் மூலம் கட்டுக்குள் வரும்.

வெண்கல பாத்திரம்:

இதையெல்லாம் தற்சமயம் நாம் பார்ப்பதே அரிது. இருந்தாலும் இந்தப் பாத்திரத்தின் நன்மைகளைப் பற்றியும் காண்போம். இதில் வெந்நீரை ஊற்றி வைத்து குடித்து வந்தால் ரத்தசோகை நீங்கும்.

மேலும் உடலில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரும்பு பாத்திரம்:

இப்போது பல இல்லத்தரசிகளும் இந்த பாத்திரத்தில் சமைக்கத் தொடங்கி விட்டார்கள். இதில் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

இந்த இரும்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி அருந்துவதன் மூலம் ரத்தத்தை விருத்தி செய்ய முடியும். மேலும் ரத்தத்தில் உள்ள பல சத்து குறைபாடுகளும் இதன் மூலம் நீங்கும்.

குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின்களை அதிகப்படுத்த இந்த பாத்திரம் நமக்கு பயன்படும். மேலும் குழந்தையின்மை, நரம்பு பிரச்சனை, வெயிலினால் ஏற்படும் நீர்சுருக்கு போன்ற பல பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.

மண் பாத்திரம்:

தற்போது அதிகமாக நாம் பயன்படுத்தும் பாத்திரங்களில் இதுவும் ஒன்று. பல கடைகளிலும் விதவிதமான வடிவங்களில் இது கிடைக்கிறது.

இந்தக் கோடை காலத்தில் இதில் நீரை ஊற்றி வைத்து அருந்தினால் வறட்சி நீங்கும். அதிலும் காய்ச்சிய நீரை இதில் ஆற வைத்து அருந்தினால் உடல் சூடு தணிந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

மேலும் இந்த பாத்திரத்தில் உணவை சமைப்பதன் மூலம் ருசியும் கூடும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

இந்த காலகட்டத்தில் வெள்ளி, வெண்கலம், தங்கம் போன்ற பாத்திரங்களை நாம் காண்பது மிகவும் அரிது அப்படியே அதை பயன்படுத்த நினைத்தாலும் நம்மால் அது சற்று முடியாத காரியம்.

ஆனால் இரும்பு பாத்திரம், செம்பு பாத்திரம், மண் பாத்திரம் போன்றவை தற்போது அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது.

ஆதலால் நம்மால் எளிதில் விலை கொடுத்து வாங்க கூடிய இந்த பாத்திரங்களை வாங்கி நாம் அன்றாடம் பயன்படுத்தி வந்தோம் என்றால் தேவையற்ற பல உடல் பிரச்சனைகளும் நீங்கும்.

இதை நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வந்தோம் என்றால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நம்முடைய இந்த பாரம்பரியம் செல்லும்.

நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தி வந்த இந்த ரகசியத்தை அடுத்த அடுத்த தலைமுறைகளும் பின்பற்றி வந்தால் தற்போது நம் உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா கூட நம்மை நெருங்க பயப்படும்.

Comments are closed.