காலம் காலமாக பெண்கள் அதிகம் விரும்பும் ஒரே விஷயம் என்றால் அது ஆபரணங்கள் தான். அதிலும் தங்க நகைகளின் மீது ஆசை கொள்ளாத பெண்களே இருக்க முடியாது. முன்பெல்லாம் வைரம் மாணிக்கம் மரகதம் போன்ற நகைகளை அதிக அளவில் பெண்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இந்த நவநாகரிக உலகில் பெண்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற நகைகளின் மேல் அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. சொல்லப்போனால் பெண்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாகவே இந்த நகைகள் மாறிவிட்டது.
நம் உடலை எந்த அளவுக்கு நாம் பராமரித்து வருகிறோமோ அதே போன்று இந்த நகைகளையும் பராமரிக்க வேண்டும். அதிகப்படியான அழுக்கு, தூசி காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் விரைவில் அழுக்காகி மங்கிய நிலைக்கு போய்விடும்.
அது மட்டுமல்லாமல் இந்த நகைகளை அதிக காலம் உபயோகிக்கும் போது பளபளப்பும் குறைந்துவிடும் .அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டிலேயே தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பளபளப்பாக்க நம்மால் முடியும். இதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கு காண்போம்.
Also read: பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா.. நமக்கு தெரியாத விஷயங்கள்
வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அத்துடன் பாத்திரம் கழுவும் தூள், லிக்விட் போன்ற ஏதாவது ஒன்றை அதில் சிறிதளவு கலந்து வைத்துக் கொள்ளவும். பின்பு தங்க நகையை அதில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
இப்பொழுது அழுக்கு மெல்ல கரைய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் டூத் பிரஷ்சை வைத்து மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு நகைகளை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு மென்மையான துணியை வைத்து துடைக்க வேண்டும்.
மேலும் பல் விளக்கும் பேஸ்ட்டை வைத்தும் தங்க நகைகளை சுத்தம் செய்யலாம். சிறிதளவு பேஸ்ட்டை தங்க நகையின் மேல் தடவி பிரஸ்சை வைத்து மெதுவாக தேய்க்க வேண்டும். பிறகு நகைகளை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்து மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். இந்த முறை நல்ல பலனை கொடுக்கும்.
சிறிது அம்மோனியா பொடியை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து வைக்க வேண்டும். இதில் தங்க நகைகளை ஊறவைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து எடுத்து விட வேண்டும். அதன் பிறகு பிரஷ்சை வைத்து சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து கழுவ வேண்டும். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் அந்த நகைகளில் முத்துக்கள் அல்லது ரத்தினங்கள் எதுவும் இருக்கக் கூடாது.
Also read: இயற்கை முறையில் பிங்க் நிற உதடுகளை பெறுவது எப்படி?
வெள்ளி நகைகளை சுத்தம் செய்வதற்கு உப்பு மிகவும் உதவியாக இருக்கும் சிறிதளவு வெந்நீரில் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் அதில் வெள்ளி நகைகளை நன்றாக மூழ்கும் படி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பிரஸ்சை வைத்து அதை நன்றாக சுத்தம் செய்து சுத்தமான நீரில் அதை கழுவ வேண்டும். இதன் மூலம் வெள்ளி பாத்திரங்கள் பளபளக்கும்.
சிறிதளவு அலுமினிய பேப்பரை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது வெள்ளி நகைகளை வைக்க வேண்டும். பிறகு அதன் மேல் பேக்கிங் சோடாவை சிறிதளவு போட்டு வெதுவெதுப்பான நீரை அதன் மீது ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து வெள்ளி நகைகளை நல்ல தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
மேற்கூறிய இந்த வழிமுறைகள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பளபளப்பாக்குவதற்கு மிகுந்த உதவியாக இருக்கும். இதன்மூலம் கடைகளுக்கு சென்று காசை வீணடிக்காமல் வீட்டிலேயே நம் நகைகளை சுத்தமாகவும் பள பளப்பாகவும் வைத்திருக்க முடியும்.
Also read: உலகின் மிக நீளமான அணை எது தெரியுமா?
1 Comment