இந்து மதத்தில் பல்வேறு நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. அந்த நம்பிக்கை மனிதனை அறவழியில் வழிநடத்தும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெய்வங்கள் ஏன் சில விலங்குகளை வாகனமாக வைத்துள்ளனர் என்பதை பார்ப்போம்.
இந்து சமயத்தில் பல்வேறு கடவுள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வங்களும் ஒரு சிறப்பம்சமும் கொண்டுள்ளன.
காகம் வாகனம்:
காகத்தை வாகனமாகக் கொண்டவர் சனீஸ்வரன் இவர் காகத்தை போல ஒற்றுமையாக இருக்க வலியுறுத்துபவர்.
நாய் வாகனம்:
நாய் போல நன்றியுடன் இரு என்பதை உணர்த்துவதற்காக பைரவர் நாயை வாகனமாக ஏற்றார். பைரவரை வணங்க செல்வத்தை நமக்கு வாரி வழங்குவார்.
ஆந்தை வாகனம்:
செல்வத்தை தர வல்ல லட்சுமி தேவியின் ஆந்தை வாகனம் விழிப்புடன் இரு என்பதை உணர்த்துவதாகும்.
சிங்கம் வாகனம்:
சிங்கத்தைப் போல வீரத்துடன், தைரியமாக இருக்க வலியுறுத்தும் விதமாக அன்னை ஆதிபராசக்தி வாகனமாக ஏற்றார்.
அன்னப்பறவை வாகனம்:
அன்னப்பறவை போல பாலையும் தண்ணீரையும் பிரித்துப் பார்க்கும் அறிவுடன் இருக்க வேண்டும். மனிதர்கள் அப்படி நட்புக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சரஸ்வதிதேவி வாகனமாக கொண்டுள்ளார்.
எலி வாகனம்:
எலியைப் போல சுரண்டாமல் ஊழல் செய்யாமல் இரு என்பதனை உணர்த்த, விநாயகர் எலியை வாகனமா ஏற்றார்.
மயில் வாகனம்:
மயில் தோகை விரித்து ஆடுவதை போல எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முருகனை வழிபட அவரின் அருள் கிடைக்கும்.
கருட வாகனம்:
நம் மனம் கருடனை போல பிரச்சினைகளை மறந்து உயரப் பறக்கும் கூர்மையான பார்வையால் எம்பெருமானைக் கண்டு தொழவும் வேண்டும் என்பதை உணர்த்த எம்பெருமான் கருட வாகனத்தில் உள்ளார்.
காளை வாகனம்:
தீமைகளை எதிர்த்து, மன உறுதியுடன் காளைகளை போல எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உலகை படைத்த ஈசனுக்கு வாகனமாக்கி நிற்கிறார்.