ஆரோக்கியமான பூண்டு ரசம் செய்வது எப்படி?

அதிகப்படியான உணவுகளை சாப்பிட்டு விட்டு வயிறு சரியில்லையா அப்ப இந்த ரசத்தை சாப்பிட்டு பாருங்க

தேவையான பொருட்கள்:

பூண்டுn- 15 பல்
புளி – சிறிதளவு
தக்காளி – 1
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பச்சைமிளகாய் – ஒன்று
மஞ்சள்தூள் – சிறிதளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
மல்லித்தழை – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒருஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

புளியை சிறிதளவு தண்ணீர் சேர் த்து ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் பூண்டு, மிளகு, சீரகம், கருவேப்பிலை, தக்காளி அனைத்தையும் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

புளி தண்ணீரில் அரைத்து வைத்ததை போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு போட்டு கலக்கவும். பச்சை மிளகாயை கீறி அத்துடன் சேர்க்கவும் பின்பு மல்லித்தழையை சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சூடேற்றிய பிறகு அதில் எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும் கடுகை போடவும், கடுகு பொரிந்தவுடன் கரைத்து வைத்துள்ள கரைசலை அதில் சேர்க்கவும். ரசம் கொதிக்கும் முன்னரே இறக்கி விடவும். இறக்கியவுடன் பெருங்காயத் தூளை சேர்த்து மூடி வைக்கவும்.

இந்த ரசம் அஜீரண கோளாறுக்கு மிகவும் சிறந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய எளிதான உணவு.