சுவையான வெஜ் ஆம்லெட்.. சைவ பிரியர்களுக்கான சூப்பர் ரெசிபி 

சைவ சாப்பாட்டில் எவ்வளுதான் நன்மைகள் இருந்தாலும் நாம் ருசி பார்த்து சாப்பிடுவது என்னவோ அசைவம் தான்.

அன்றைய கால கட்டத்தில் உணவு பொருட்கள் அனைத்தும் நமக்கு தர மிக்கதாக கிடைத்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவு ஒரு வியாபாரமாக மாறி விட்டது.

அதிலும் அசைவம் தான் கலப்படம் என்றால் அதற்கு இணையாக சைவமும் ஹைப்ரிட் கலந்து விற்க ஆரம்பித்து விட்டனர்.

நாம் அன்றாடம் உபயோக படுத்தும் அசைவ உணவான மட்டன் முதல் சிக்கன் வரை அனைத்தும் கலப்படம் கலந்தாகவே மாறி விட்டது. அது என்னதான் இருந்தாலும் அனைத்து ஹோட்டலிலும் கூட்டம் கூடுவது என்னவோ அசைவ உணவுக்குத்தான்.

இன்றைய கால கட்டத்தில் சைவ பிரியர்களுக்கு பச்சை காய் கறிகள் கிடைப்பதே அரிதாகி விட்டது. அவர்களுக்கு சுவையான வெஜ் ஆம்லெட் ரெடி.

பொதுவாக நம் அனைவரும் வீட்டில் காய்கறி எதுவும் இல்லை என்றால் நாம் உடனே தேடிப் போவது முட்டை பக்கம் தான். எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு முட்டை. அதில் பொடிமாஸ், ஆம்லெட் இதெல்லாம் பார்த்திருப்போம். ஆனால் இது வெஜ் ஆம்லெட் அசைவம் சாப்பிடாதவர்கள் காண ஒரு சூப்பர் ரெசிபி.

இதற்கு தேவையான பொருட்கள்:-

 • கடலை மாவு – 3 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
 • வெங்காயம்- 2
 • தக்காளி – 1
 • பச்சை மிளகாய் – இரண்டு
 • சீரகத்தூள்  – சிறிதளவு
 • மிளகு தூள் – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் –  சிறிதளவு.
 • கறிவேப்பிலை – சிறிதளவு.
 • மல்லித்தழை   –   சிறிதளவு.

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை இவை அனைத்தையும் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு தோசைக்கல்லில் மிக்ஸ் செய்ததை எடுத்து அப்படியே ஊற்ற வேண்டும்.

பின் எண்ணெய் சேர்த்து திருப்பி போட்டு நன்கு வெந்ததும் எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான வெஜ் ஆம்லெட் ரெடி. சைவம் சாப்பிடுபவர்களுக்கு இது  ஒரு சுவையான  டிஷ். செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.

Comments are closed.