இடது கண் துடித்தால் என்ன பலன்.. புராண கதையின் மூலம் அறிந்து கொள்வோம்

பொதுவாக கண் துடிப்பது என்பது உடல் கூறுகளை மட்டும் குறிப்பதில்லை, அதன் நன்மை, தீமைகளை நமக்கு உணர்த்துகிற ஒரு சகுனமாகவும் விளங்குகிறது. இதற்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. அந்த வகையில் இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்றும் கூறப்படுகிறது.

அது எப்படி என்று ஒரு இதிகாச கதையின் வழியாக தெரிந்து கொள்வோம். நம்மில் பலருக்கும் ராமாயண கதை பற்றி தெரியும். அதில் ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். இராமா! நாம் நண்பர்களாகி விட்டோம்.

இனிமேல் சுகமோ, கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது, என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில் எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மை ஏற்படும்.

Also read: பாதங்களை பட்டுப்போல் மென்மையாக வைத்திருக்கும் வழிகள்.. பாத வெடிப்புக்கு குட்பை சொல்லுங்க

சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடது கண் துடித்தால் அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது என்பர். அதனால் இனி இந்த செய்தியை தெரிந்து வைத்துக்கொண்டு தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இனி பயம் இன்றி, அறிவியல் ரீதியான உண்மைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் உங்களுக்கு உபயோகமாகும்.

Also read: ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்ன அதிசய மருத்துவம்.. சுடு தண்ணீரை சாதாரணமா நினைச்சிடாதீங்க