சட்டுனு சுவையான கார முட்டை செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி..

இன்றைய கால கட்டத்தில் சைவ பிரியர்களை விட அசைவ பிரியர்களே அதிகம். அதிலும் முட்டை மிக எளிதில் கிடைக்க கூடியது மற்றும் மற்ற அசைவ உணவான மீன், சிக்கன் மற்றும் மட்டன் இவற்றோடு ஒப்பிட்டால் விலையும் குறைவு. அதிலும் நாட்டு முட்டை உடலுக்கும் நல்லது மற்றும் சுவையும் சற்று கூடும்

நாம் வித விதமான உணவுகளை ரசித்து சாப்பிடுவது தனி சுகம் தான். அதில் முட்டை புடிக்கலைன்னு சொல்றவங்க இருக்கவே முடியாது. சட்டுனு நிமிஷத்துல செய்யக்கூடிய  ரெசிபி தான் இந்த கார முட்டை.

தேவையான பொருட்கள்:

முட்டை       – 3
எண்ணெய்  – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு                – தேவையான அளவு

செய்முறை;

முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள் உப்பு இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு முட்டையை இரண்டாக வெட்டி கலந்து வைத்துள்ள மிளகாய் பொடியில் புரட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை அதில் வைக்கவும்.

முட்டை பொன்னிறமாக வந்தவுடன் திருப்பி போடவும், 2 நிமிடங்கள் கழித்து தட்டிற்கு மாற்றி விடவும்.

முட்டையில் ஆம்ப்லேட், ஆப்பாயில் என்று பல வகை விரைட்டிஸ் இருந்தாலும் கார முட்டை சுவை தனிரகம். இந்த கார முட்டை எல்லாவிதமான சாத வகைகளுக்கும் ஏற்றது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் இது போன்ற பல வகையான சமையல் குறிப்புகளை அறிய எமது வலைதளத்தை பின் தொடருங்கள்.

என்ன குழம்பு வைக்கிறதுன்னு குழப்பமா இருக்குதா.. காரசாரமான இந்த பருப்பு பொடிய ட்ரை பண்ணுங்க