பித்தவெடிப்பால் அவதியா.? தீர்வுகளும், காரணங்களும் இதோ உங்களுக்காக

பித்த வெடிப்பு என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் சர்வசாதாரணமாக இருக்கக் கூடியவை என்றாகிவிட்டது. என்ன செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுப்பது மற்றும் பித்த வெடிப்பு வந்துவிட்டால் அதை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி இங்கு காணலாம்.

முதலில் நம் கால்களை பராமரிக்க வேண்டியது அவசியம். இதை பலரும் கூறி நாம் கேள்விபட்டிருப்போம். ஒரு பெண்ணின் சுத்தத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவளின் பாதத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அப்படி கேள்விப்படவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பெண்ணின் பாதத்தை பார்த்தாலே கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால் தான் நாம் பாதத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தன் பாதம் அழகாக இருந்தாலே நாமும் அழகாக தெரிவோம் என்பார்கள்.

அதனால் நம் பாதத்தின் மீது நன்கு கவனம் செலுத்தி அதனை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அது எப்படி என்றால் முதலில் வெளியில் செல்லும்பொழுது காலில் காலணியை அணிந்து செல்லவேண்டும். இந்த பித்த வெடிப்பு அதிகம் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வரக்கூடும். ஏனென்றால்

அவர்கள் காலணி அணியாமல் வெறும் காலில் மண்ணில் நடந்து செல்வார்கள். அதனால் காலில் அழுக்குப்படும், அந்த அழுக்கு தான் அவர்களுக்கு பித்த வெடிப்பாக மாறுகிறது. அதனால் நீங்கள் கிராமத்தில் இருப்பவர்களாக இருந்தால் வெளியில் செல்லும் பொழுது வெறும் காலில் செல்லக்கூடாது, காலணி அணிந்து செல்வது கட்டாயம்.

அப்போது தான் பித்த வெடிப்பு வராமல் தடுக்க முடியும். மேலும் தினமும் குளிக்கும்போது பாதத்தில் உள்ள அழுக்கை நன்றாக சுத்தம் செய்து வரவேண்டும். ஒருநாள் செய்துவிட்டு மறுநாள் விட்டுவிட்டாலும் அந்த அழுக்கு மறுபடியும் அதிகம் சேர்ந்து விடும்.

இப்போதுதான் பித்தவெடிப்பு வர ஆரம்பித்திருக்கிறது என்பவர்களுக்கு எளிதான வழி ஒன்று இருக்கிறது. பொதுவாகவே குளிர்காலத்தில் அதிகம் பித்தவெடிப்பு வர ஆரம்பிக்கும். அதனை தடுப்பதற்கு குளித்து முடித்த பின், பாதத்தில் நகத்தை வைத்து மெதுவாக ஒரு முறை நன்றாக சுரண்ட வேண்டும். அப்போது இறந்த செல்கள் வெளியேறிவிடும். இதனை குளிக்கும் பொழுது தினமும் செய்தால்தான் பலன் கிடைக்கும். இதை பித்தவெடிப்பு ஆரம்ப பருவத்தில் இருப்பவர்கள் மட்டும் இதனை செய்யவும்.

பித்தவெடிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு என்ன செய்தால் போகும் என்பதையும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் பார்ப்போம். விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணையை மிதமான அளவிற்கு சூடு காட்டி, அதை இரவு உறங்க செல்வதற்கு முன் பாதத்தில் நன்றாக தேய்த்து விட்டு உறங்குங்கள். இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

மேலும் இரவு படுக்க செல்லும் முன் உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது கல்லுப்பு கலந்து அதில் ஊற வைக்க வேண்டும். பிறகு மென்மையான துணியால் கால்களை துடைக்க வேண்டும். இதுவும் பித்தவெடிப்புக்கு சிறந்த நிவாரணம் ஆகும்.