இதை செய்து பாருங்கள் எவ்வளவு கருமையாக இருந்தாலும் சருமம் பளபளன்னு ஜொலிக்கும்..

பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை நாம் கருமையாக இருக்கிறோம் என்பதுதான். வீட்டிலுள்ள கற்றாழை போன்றவற்றை வைத்து செய்தாலே அதற்கான பலன் கிடைத்து விடும். ஆனால் நாம் யாருக்கும் அந்த அளவு பொறுமை கிடையாது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரு பொருளை பயன்படுத்தினால் அதற்கான பலனை உடனே எதிர்பார்க்கிறோம்.

ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது அதற்கான பலன் உடனே கிடைத்து விடாது. அதற்கு சிறிது நாள் எடுத்துக்கொள்ளும் ஆகவே தினமும் பயன்படுத்தி பலனை காண்க. அது உடனே கிடைக்கவில்லை என்றால் உடனே அந்த பொருளை தவிர்த்து விடுகிறோம் அதுவே நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. எந்த பிரச்சினைக்கு எல்லாம் கருவளையம் தீர்வாகும் என்று பாருங்கள்.

கற்றாழையை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள கருவளையம், முகத்தில் படிந்திருக்கும் கருமை, முகப்பருக்கள், முகப்பருக்களால் தோன்றிய தழும்புகள், கழுத்தை சுற்றி இருக்கும் கருமைகள், தோல் சுருக்கங்கள் போன்றவற்றிற்கு கற்றாழையை பயன்படுத்தி இயற்கையின் மூலம் அழகு பெறுவது எப்படி என்பது காண்போம்.

Also read: ஒரே வாரத்தில் கருவளையம் மறைய வேண்டுமா? அப்போ இத யூஸ் பண்ணுங்க..

சிலருக்கு கற்றாழை பயன்படுத்துவதனால் ஒத்துக்கொள்ளாது. தோல் நோய் ஏற்படுகிறது என்று பலரும் கூறுகின்றனர். இந்த முறையில் கற்றாழையை பயன்படுத்தி பாருங்கள், நீங்கள் எதற்காக பயன்படுத்துகிறீர்களோ அதற்கான பலனை அடைவீர்கள். எப்படி செய்வது என்றும் எப்படி இதனைப் பயன்படுத்துவது மற்றும் எப்படி இதை பயன்படுத்தக் கூடாது என்பதையும் பற்றி பார்ப்போம்.

கற்றாழையை எடுத்து அதன் இருபுறமும் உள்ள முட்களை நீக்கி, மற்றும் அதன் முன் பின் இருக்கும் தோல்களையும் அகற்றவும். இவற்றை நீக்கியபின் அதை சுத்தமான தண்ணீரில் நன்கு அலச வேண்டும். அதை நான்கு முறையும் தண்ணீரை மாற்றி மாற்றி அலசவேண்டும். இதனால் அதில் உள்ள மருத்துவத் தன்மை போய்விடும் என்று பலருக்கும் சந்தேகம் வரக்கூடும்.

கண்டிப்பாக அந்த மருத்துவ குணம் போகாது. கற்றாழையின் மேல் இருக்கக்கூடிய சிறிதளவு அரிப்புத் தன்மை இருக்கக்கூடிய ஜெல் மட்டும் தான் போகும். எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாமல் அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அப்படியேதான் இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். கற்றாழையுடன் சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதனை தினந்தோறும் பின்பற்றி வந்தால் முகம் பொலிவு பெறும். இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள், உடனே செய்து பாருங்கள்.

Comments are closed.