உயர் ரத்த அழுத்தத்தால் அவதியா?.. கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வந்து விடுகிறது. முன்பெல்லாம் நூற்றில் இருவருக்கு வந்த இந்த பிரச்சனை இப்போது பலருக்கும் இருக்கிறது. இந்த ரத்த அழுத்தம் கட்டுக்குள் வராமல் போனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

இதனால் இதை கட்டுப்படுத்துவதற்கு பலரும் மருத்துவரிடம் சென்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்படி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சில பக்க விளைவுகளும், அலர்ஜிகளும் ஏற்படுகின்றது.

இது போன்ற தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்க நாம் சில உணவு பழக்கங்களை மேற்கொண்டாலே போதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி விடலாம். பின்வரும் முறைகளை நாம் தொடர்ந்து பின்பற்றி வர ரத்த அழுத்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தானியங்கள் கம்பு, கேழ்வரகு, திணை, கோதுமை போன்ற தானிய வகைகளை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அது நம் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்லாது சில நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது.

மேலும் இந்த தானியங்களால் செய்யப்படும் சப்பாத்தி, தோசை போன்ற அனைத்து உணவுகளும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் காலை வேளையில் இந்த முழு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது நமக்கு இன்னும் கூடுதல் பயனளிக்கும்.

Also read: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அற்புதமான வேம்பு தேநீர்

காய்கறிகள் தினசரி நம்முடைய உணவில் அதிக காய்கறிகளை நாம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய உணவில் ஏறத்தாழ 20 சதவீதம் காய்கறிகள் நிரம்பி இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிலும் கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு பலத்தை அளிக்கும். மேலும் கிழங்கு வகைகள், கேரட், பீட்ரூட் போன்ற உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். வறுத்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு இன்னும் நல்லது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

பழங்கள் ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, பேரிச்சம் பழம் போன்ற பழங்களை நாம் தினமும் சாப்பிட வேண்டும். இதை ஜூஸாக செய்து சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவது இன்னும் சிறந்தது. இந்த பழங்களில் இருக்கும் நார் சத்துக்கள் நம் உடலில் இருக்கும் பல வியாதிகளை அடித்து விரட்டி விடும்.

பால் பால் மற்றும் பாலினால் செய்த பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள புரத ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. அந்த வகையில் பால், மோர், தயிர், வெண்ணெய் போன்ற எதுவாக இருந்தாலும் நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அசைவம் அசைவ உணவுகளை நாம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது பொதுவான கருத்து, ஆனால் மீன் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

பயிறு வகைகள் முளைகட்டிய பயிறு, ஆவியில் வேக வைத்து செய்த சுண்டல் போன்றவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. பச்சைப்பயிறு, கொண்டை கடலை போன்ற வகைகளை நாம் தினமும் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொள்ள ரத்த அழுத்தம் மட்டுமல்ல மற்ற உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளும் நீங்கிவிடும்.

மேற்கண்ட முறைகளை நாம் சரியாக பின்பற்றி வந்தாலே போதும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதே நேரத்தில் நாம் எண்ணெய் வகைகள், பொரித்த உணவுகள், அதிக உப்பு போன்றவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இப்படி உணவுகளின் மூலமாக பல நன்மைகள் கிடைக்கும் போது மருத்துவரை நாட வேண்டிய அவசியமே இல்லை.

Comments are closed.