சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அற்புதமான வேம்பு தேநீர்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இது வெறும் பழமொழி இல்லை. இது நிதர்சனமான உண்மை. சிறியவர் முதல் பெரியவர் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் பாதிக்கும் நோய் நீரிழிவு நோய்.

சர்க்கரை நோயினால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு விதமான மருந்துகளை உபயோகித்தாலும் நீரிழிவு நோய் முற்றிலும் ஒழிந்து போவதில்லை.

வருமுன் காப்பது நன்று என்பதால், சர்க்கரை நோயை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய முறையில் சுலபமாக நீரிழிவு நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Also read: வயிற்று வலிக்கு வீட்டிலேயே பாட்டியின் கை வைத்தியம்…

அதில் ஒரு வழி வேம்பு தேநீர். தயாரிப்பது சுலபம். தேவையான பொருட்களும் வீட்டில் இருப்பவை வேப்பிலையை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

வேம்பு தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்:

வேப்பிலை தூள்-1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 1/2 கப்
இலவங்கப்பட்டை தூள் – 1/2 தேக்கரண்டி
டீ தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை: முதலில் வேப்பிலையை தூளாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை தூள் மற்றும் லவங்கப்பட்டை தூளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதேபோல், தண்ணீரில் தேயிலையை சேர்த்துக் கொதிக்க வைத்து கொள்ளவும்.

இந்த இரண்டு பானங்களையும் ஒன்றாக கலந்து குடித்து வரவும். இந்த வேம்பு தேநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் சர்க்கரை நோயில்லாதவர்கள் இந்த தேநீரை குடித்து வந்தால், அவர்களை நெருங்க நீரிழிவும் தயங்கும்.