எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கையில் இருக்கும் நன்மைகள்.. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு

பொதுவாக அனைத்து வீடுகளிலும் இருக்கக்கூடிய ஒரு மரம் தான் இந்த முருங்கை மரம். மற்ற மரங்களைப் போல் இல்லாமல் வெகு சீக்கிரமே வளரக்கூடிய இந்த மரத்திற்கு நாம் தனியாக கவனம் எடுத்து வளர்க்க தேவையில்லை.

இப்படி மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய இந்த முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் கீரை, காய் போன்றவற்றில் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இப்பொழுது நகர்ப்புறங்களில் இருக்கும் ஹோட்டல்களில் இந்த கீரை சூப் ரொம்ப பேமஸ். அதிலும் முருங்கைக்காயில் இருக்கும் சதையை எடுத்து செய்யும் சூப் பலரும் விரும்பி கேட்டு வாங்கக் கூடியதாக இருக்கிறது.

இதை எப்படி பயன்படுத்தினால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை நாம் இங்கு காண்போம். இந்த முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். மேலும் இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

இதில் விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கிறது. அதனால் இதை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடல் வளர்ச்சி அடையும் ஆயுள் விருத்தியாகும். மேலும் பற்கள் சம்பந்தமாக இருக்கும் பல பிரச்சினைகள் இதனால் சரி செய்யப்படுகிறது.

இன்றைய இளம் தலைமுறைகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை இந்த முடி கொட்டுதல் பிரச்சினைதான். அதற்கு இந்த முருங்கைக்கீரை சரியான ஒரு தீர்வாக இருக்கிறது. இது நம் முடியை நீளமாக வளர செய்வதோடு, நரை முடியை நீக்க வல்லது.

மேலும் வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண், தோல் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்த முருங்கைக்கீரை மருந்தாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தை பெற்ற பெண்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கும்.

ஆஸ்துமா, நெஞ்சு சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கும் இந்த கீரையின் சூப் நமக்கு உதவும். ஆண், பெண் இருபாலருக்கும் இருக்கும் மலட்டுத்தன்மையை அகற்றவும் இந்த கீரை நமக்கு உதவுகிறது. இந்த கீரை மட்டுமல்லாமல் முருங்கைக்காயும் நமக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது.

இந்த முருங்கைக்காயை சமைத்து சாப்பிடும் போது சிறுநீரகம் அதிக அளவில் ஆரோக்கியமாக இருக்கும். ரத்தம் மற்றும் சிறுநீரை சுத்தம் செய்யவும் இது உதவுகிறது. பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிக்கு இந்த முருங்கைக்காய் சூப் நல்ல நிவாரணம் கொடுக்கும்.

கருப்பையில் இருக்கும் குறைகளை போக்கி கருத்தரிக்கவும், பிரசவத்தை எளிதாக்கவும் இது உதவுகிறது. மேலும் நாய்க்கடியின் விஷத்தை முறிப்பதிலும் இந்த இலை முக்கிய பங்கு வகிக்கிறது. முருங்கை இலையுடன் பூண்டு பல் 2, ஒரு துண்டு மஞ்சள், மிளகு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சிறிதளவு சாப்பிட்டு விட்டு, அதை நாய் கடித்த இடத்தில் பூசி வரவும். இப்படி செய்துவர நாய்க்கடியின் விஷம் முறிந்து கடியினால் உண்டான புண்ணும் ஆறும்.

அதுமட்டுமல்லாமல் முருங்கை பட்டையை நன்றாக இடித்து மண்சட்டியில் போட்டு நீர்விட்டு சுண்ட காய்ச்சி கசாயமாக தயாரித்துக் கொள்ளவும். இதை வலிப்பு நோய் இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனால் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கும் அதிக அளவில் கொடுத்து வந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.