சிவப்பு நிற பழங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!.. இனிமே அதை வேண்டாம்னு சொல்லாதீங்க

பொதுவாக நாம் சாப்பிடக்கூடிய காய்கறி, பழங்கள் ஆகியவற்றில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதிலும் தினமும் நாம் ஏதாவது ஒரு பழத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்கள் நம் உடலை பேணி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அது எப்படி என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் பல மருத்துவர்களும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் ஆய்வு அறிக்கையில் சிவப்பு நிற பழங்கள் குறித்து ஏராளமான விஷயங்களை கூறுகின்றனர்.

உடலில் முக்கியமான ஒரு உறுப்பாக இருப்பது இதயம். அந்த இதயத்தை மிகவும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருப்பதற்கு இந்த சிவப்பு நிறப் பழங்கள் நமக்கு பெரிதும் உதவுகிறது. இந்த சிவப்பு நிறப் பழங்கள் இப்பொழுது மிகவும் எளிதாக கிடைக்கிறது.

அதில் முக்கியமாக ஆப்பிள், மாதுளை, செர்ரி, தர்பூசணி, ராஸ்பெரிஸ், ஸ்ட்ராபெர்ரி, கிரேப் ப்ரூட், தக்காளி போன்ற உணவுகள் நம் உடலுக்கு பல ஆரோக்கியமான விஷயங்களை தருகிறது. இந்த பழங்களில் லைகோபீன் என்ற அடர் சிவப்பு நிற கரோட்டின் இருக்கிறது.

அதனால்தான் இந்தப் பழங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இந்தப் பழங்கள் சிறந்த ஆக்சிஜனேற்றியாக இருக்கிறது. அதனால் புற்றுநோயை தடுக்கும் வல்லமையும் அதற்கு உண்டு. இந்த பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொண்டோம் என்றால் ரத்தப் புற்றுநோயை நம்மால் தடுக்க இயலும்.

மேலும் ரத்தம் உறைவதையும் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் விட்டமின் பி3, வைட்டமின் பி6, புரோட்டீன், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற ஏராளமான சத்துக்கள் இருக்கின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பழங்கள் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வல்லது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவுகிறது.

மேலும் இந்தப் பழங்கள் நம் சருமத்தை பாதுகாப்பதோடு முகப்பொலிவையும், உடல் மினு மினுப்பையும் கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் நோய்த்தொற்றுகள் மற்றும் கிருமிகள் எதுவும் அண்டவிடாமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் குறைக்க கூடியது.

இப்போது பெரும்பாலும் சிவப்பு நிற கொய்யாப் பழங்களை நாம் காண்பது அரிது. ஆனால் கிராமப்புறங்களில் இன்றும் கூட அந்த பழங்கள் கிடைக்கின்றது. அதனால் இது போன்ற சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்களை நாம் தொடர்ந்து எடுத்துக்கொண்டோம் என்றால் நம் உடலில் எந்த ஆரோக்கிய பிரச்சினையும் ஏற்படாது.

இதை இப்போது மருத்துவர்களும், நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல வருடங்களுக்கு முன்பே சித்தர்களும் இதைப் பற்றி குறிப்புகளில் எழுதி இருக்கின்றனர். அதனால் குழந்தைகள் இந்த பழங்களை வேண்டாம் என்று ஒதுக்கினாலும் நாம் கண்டிப்பாக இதை அவங்களுக்கு பிடிக்கும் வகையில் ஜூஸ் அல்லது ஐஸ்க்ரீம் போன்று தயாரித்து கொடுக்கலாம்.