கெட்ட கனவுகளால் நிம்மதி இல்லையா?.. அப்ப இதை பின்பற்றுங்கள்

பொதுவாக ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். பகல், இரவு என்று தொடர்ந்து வேலை செய்து அசந்துபோய் தூக்கத்தை தேடும்போது பல வேண்டாத கெட்ட கனவுகளும் நம் தூக்கத்தை கெடுக்கும். சில நேரங்களில் நாம் அதை எளிதாக கடந்து விடுவோம். ஆனால் பல சமயங்களில் அந்த கெட்ட கனவுகள் நம்மை ஒரு வித படபடப்புடன், பதட்டத்துடனே வைத்திருக்கும்.

சில கனவுகள் நம் நிம்மதியை கெடுக்கும். இதற்குக் காரணம் நம் ஆழ்மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனையும், நீண்டநாள் நிறைவேறாத ஆசையும் தான். அதுமட்டுமல்லாமல் கண் திருஷ்டி, கெட்ட சக்திகளின் தாக்கம் இவை இருந்தாலும் நமக்கு கெட்ட கனவுகள் வரும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

இதில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள மன நிம்மதிக்காகக் சிலர் மருத்துவரை தேடுவது உண்டு. அவர் நாம் தூங்குவதற்கு தூக்க மாத்திரையை கொடுப்பார். அதை உபயோகப் படுத்தும் நமக்கு நாளடைவில் அந்த மாத்திரை இல்லாமல் தூக்கமே வராது என்ற நிலைமை வந்துவிடும்.

Also read: கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் ? விடுபட வழி என்ன?

இதற்கு ஆன்மீகம் சம்பந்தமான சில வழிமுறைகளும் இருக்கிறது. நம் பாதுகாப்பிற்காக இதை செய்து கொள்ளலாம். என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் சில அடிப்படை சாஸ்திரங்களை நம்மால் மறுக்க இயலாது. கெட்ட கனவிலிருந்து இந்த பரிகாரம் மூலம் நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

கல் உப்பு, மஞ்சள் பொடி இவை இரண்டையும் ஒன்றாக கலந்து நீங்கள் குளிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் குளிக்க வேண்டும். இது உங்களை கண் திருஷ்டியில் இருந்து காக்கும்.

அதே போல் ஏதாவது ஒரு கெட்ட சக்தி உங்கள் உடம்பில் ஊடுருவி இருந்தாலும் அது நிச்சயமாக உங்கள் உடலில் இருந்து அகன்று விடும். இந்த குளியல் முறையை நீங்கள் தினமும் அல்லது வாரத்தில் 2 முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

அதே போல் கருப்பு மற்றும் சிகப்பு கயிறுக்கு கெட்ட சக்தியை நம்மிடம் அண்ட விடாமல் தடுக்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. ஆதலால் நீங்கள் கருப்பு அல்லது சிவப்பு கயிறை வாங்கி அனுமன் அல்லது பைரவர் கோவிலுக்கு சென்று அதை சுவாமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து அதை 9 முடிச்சுகளைப் போட்டு உங்களது கையில் கட்டிக் கொண்டால் போதும் எந்த விதமான கெட்ட சக்தியும் உங்களை அண்டாது கெட்ட கனவும் வராது. மனதில் ஏற்படும் தேவையில்லாத பயமும் குழப்பமும் உங்களை அறியாமலேயே உங்களை விட்டு சென்றுவிடும். இந்த முறைகளை நீங்கள் பின்பற்றினால் நல்ல மாற்றம் கிடைப்பதை உங்களால் கட்டாயம் உணர முடியும்.

Also read: உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் பாத மசாஜ்.. நமக்குத் தெரியாத ஆச்சரிய தகவல்கள்