திருமணத்தில் அர்ச்சதை அரிசியில் போடுவது ஏன்?

திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்கள நிகழ்ச்சி என்றாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு பரிபூரணமாக கிடைக்கிறது. முனை முறியாத அரிசிக்கு பெயர்தான் அர்சதை. பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு அடியில் விளைவதும் மங்களங்களை கொடுப்பதும் மஞ்சள், இவ்விரண்டையும் இணைத்திடும் தூய பசு நெய். இந்த மூன்று மங்களப் பொருட்களின் கூட்டணி தான் அட்சதை. இதனை தூவி ஆசீர்வதிக்கும் போது ஆசீர்வாதம் பெறுபவருக்கு அனைத்து விதமான … Read more

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடக்கும் கல்யாணம்.. எதற்காக தெரியுமா?

காலம் காலமாக நம் நாட்டில் நடக்கும் திருமணங்களில் ஏகப்பட்ட சடங்குகள் செய்வதுண்டு. அதிலும் தமிழ் முறைப்படி நடக்கும் நம் இந்து திருமணத்தில் ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவது உண்டு. இப்படி நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு பின் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது. மணமகன் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டுவதில் இருந்து அம்மி மிதிப்பது வரை ஏகப்பட்ட விஷயங்கள் திருமணத்தின்போது நடைபெறுகிறது. அதில் அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் வழக்கம் பண்டைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த … Read more

கோயில் குளத்தில் காசு போடுவது ஏன்?

கோயிலுக்குச் சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம். இதை ஒரு சம்பிரதாயமாக நினைத்து பலரும் செய்வதை பார்த்து இருக்கிறோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை நாம் தெரிந்து கொள்வோம். தமிழர்கள் கோயில்களுக்குச் சென்றால், அங்கு உள்ள கிணறுகளிலும், தெப்பக் குளங்களிலும் காசு போடும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அக்காலத்தில் போடப்பட்ட காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டவை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். செம்பு உலோகமானது பாறை, மண், … Read more

திருமணத்திற்கு முகூர்த்தக்கால் நடுவது ஏன்?.. அறிவியல் ரீதியான உண்மைகள்.

திருமணத்திற்கு முன்பாக வீட்டின் முன்பு முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடுவதும் மாவிலைத் தோரணம் கட்டுவதும் மரபு. முதலில் பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமத்தாலும் மாவிலையினாலும் அலங்கரித்து ஈசான்ய பாகத்தில் ( வடகிழக்கு) நடுவது வழக்கம். வடகிழக்கு மூலையை “ஈசான திசை” எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது. முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் … Read more

எந்த விரலால் விபூதி வைக்க வேண்டும்?

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் போது அளிக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் பூசும் போது, அதை எப்படி எந்தெந்த விரல்களால் பூச வேண்டும் என்பதை அறிந்து செய்வதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அது குறித்த விபரங்களை நாம் பார்க்கலாம். கோயில் மட்டுமன்றி, வீட்டில் சாமி கும்பிடும்போதும் விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மைகளும் தீமையும் ஏற்படும். ஆகவே விபூதி எடுக்கும்போது கீழே குறிப்பிட்டுள்ள முறைகளில் பயன்படுத்தி மிகவும் கவனமாக அணிய வேண்டும். கட்டை … Read more

இடது கண் துடித்தால் என்ன பலன்.. புராண கதையின் மூலம் அறிந்து கொள்வோம்

பொதுவாக கண் துடிப்பது என்பது உடல் கூறுகளை மட்டும் குறிப்பதில்லை, அதன் நன்மை, தீமைகளை நமக்கு உணர்த்துகிற ஒரு சகுனமாகவும் விளங்குகிறது. இதற்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. அந்த வகையில் இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்றும் கூறப்படுகிறது. அது எப்படி என்று ஒரு இதிகாச கதையின் வழியாக தெரிந்து கொள்வோம். நம்மில் பலருக்கும் ராமாயண கதை பற்றி தெரியும். அதில் ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக … Read more

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே?

புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக பார்க்கப்படுகிறது. மற்ற தமிழ் மாதத்தில் நாம் அனைவரும் அசைவம் சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்த மாதத்தின் அசைவ உணவுகளை தவிர்த்து விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று வருமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் உள்ளது. அந்த காரணத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். புரட்டாசி மாதம் தொடங்கியதும் நம் வீட்டில் … Read more

30 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய முக்கியமான விஷயங்கள்

சொந்தக்காலில் நில் அப்பா ,அம்மா ,அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி நிற்காமல், உங்கள் சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வதே ஓர் பெரிய கௌரவம் தான். உலகம் சுற்றும் வாலிபன் குறைந்தபட்சம் சிங்கப்பூர், மலேசியா வாவது சென்று வந்து விட வேண்டும். புது இடம் புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும். … Read more

கஷ்டங்களை மறக்க வைக்கும் குழந்தைகளின் சிரிப்பு.. அறிவியல் சார்ந்த ஓர் ஆய்வு

உலகில் பலருக்கு பிடித்தமான ஒரு உயிர் என்றால் பெரும்பாலும் அது குழந்தைகள்தான். வாஞ்சையாக விளையாடுவதில் ஆரம்பித்து அவர்களை வேண்டுமென்றே அழ வைப்பது வரை குழந்தைகளுடன் பல வயதினரும் விளையாடுவார்கள், விளையாட விரும்புவார்கள். அப்படியான குழந்தைகளிடம் நகைச்சுவை உணர்வு முதல் நான்கு வருடத்தில் எப்படியெல்லாம் உருமாறுகிறது என்று லண்டனில் உள்ள பிரிஸ்டால் பல்கலைகழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. பிரிஸ்டால் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை 700 குழந்தைகளிடம் மேற்கொண்டது. மேலும் நகைச்சுவை சார்ந்து 20 கேள்விகளை ஆராய்ச்சி குழுவினர் தயார் … Read more

நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்ப்பதில்லை தெரியுமா?.. அறிவியல் சொல்லும் காரணங்கள்.

ஜோதிடத்தில் கிரகங்களின் ஒளிக்கதிர்கள் ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்தின் மீது படுவதையே கிரக பார்வை என்கிறோம். உதாரணமாக, பூமி சூரியனின் நேரடிப் பார்வையில் இருப்பதால் தான் சூரிய ஒளியானது தொடர்ந்து பூமியின் இரு பக்கங்களிலும் மாறி மாறி இரவு- பகலாக வந்தடைந்து கொண்டே இருக்கிறது. பூமியை சூரியன் பார்ப்பதால்தான் உயிர்கள் வாழ முடிகிறது. அதுவே செவ்வாய் பூமியை நெருங்கி அதிக கிரகணங்களை வெளிப்படுத்தினால் அது இயற்கை சீற்றத்திற்கு வழிவகுத்து பூமிக்கு பாதிப்பு ஏற்படும். வெகு தூரத்தில் இருந்தபடி … Read more