உடம்பில் உள்ள சளியை எப்படி எளிய வழியில் விரட்டலாம்.. வீட்டு மருத்துவம்

cough

சாதாரண இருமலுடன் சளி வந்தால் விரைவில் வெளிவந்து சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி அறிகுறிகள் சரியாக தெரியவராது.

தேனில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள்.. நாம் அறிந்ததும், அறியாததும்

இயற்கை நம் உடலுக்கு தேவையான பல அற்புதமான விஷயங்களை கொடுத்து வருகிறது. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் தேன் நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு பொருளாகும். இந்த தேன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் மூலம் ஏராளமான நோய்கள் குணமாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் வயிற்று பிரச்சனைகளுக்கு இந்த தேன் ஒரு அருமருந்தாக இருக்கிறது. இதில் 70 வகையான விட்டமின்கள் இருக்கின்றன. இந்த தேனை … Read more

ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொன்ன அதிசய மருத்துவம்.. சுடு தண்ணீரை சாதாரணமா நினைச்சிடாதீங்க

இப்போதெல்லாம் நாம் திரும்பும் பக்கமெல்லாம் மருத்துவமனை தான் இருக்கிறது. தடுக்கி விழுந்தாலே மருத்துவமனையில் விழும் அளவுக்கு தெருவுக்கு நான்கு ஹாஸ்பிடல்கள் இருக்கின்றன. ஆனால் முந்தைய காலத்தில் இப்படி எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே நம் முன்னோர்கள் தங்களுக்கு நேரும் உடல் உபாதைகளை நீக்கி கொள்வார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவ குறிப்புகள் இன்றும் கூட நமக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் ஒரு பிள்ளை பெறுவதற்கு திண்டாடி வரும் பெண்களுக்கு … Read more

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் பாத மசாஜ்.. நமக்குத் தெரியாத ஆச்சரிய தகவல்கள்

நம் உடலில் இருக்கும் பாகங்களில் பாதங்கள் மிக முக்கியமான பகுதியாகும். உடலின் மொத்த எடையையும் தாங்குவது இந்த பாதங்கள் தான். நமது பாதங்களை இதுபோல சரியான முறையில் மசாஜ் செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் இது போன்ற மசாஜ்ஜால் நரம்புகள் தூண்டப்படும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இதுபோல பாதங்களை கவனிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் இதற்கு ஆயுர்வேத மசாஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக … Read more

தலைவலி உங்களை பாடாய்ப்படுத்துகிறதா?.. இதோ அதற்கான காரணங்களும், தீர்வுகளும்

மனிதர்கள் பலருக்கும் தலைவலி என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தலையிடி, மண்டையிடி என்று குறிப்பிடப்படும் இந்த தலைவலி நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் ஒருவித வலியாகும். இது சாதாரண காரணத்தினாலும் வருவது உண்டு அல்லது தீவிர பிரச்சினையானாலும் வரக்கூடும். ஆண்களை விட பெண்களுக்கே இந்த தலை வலி அதிக அளவில் பிரச்சினையை கொடுக்கிறது. அதிலும் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தான் தலைவலி அதிகமாக இருக்கும். மேலும் சரியான ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், நேரம் … Read more

நெஞ்சு எரிச்சலால் ரொம்ப தொல்லையா?.. உடனடி நிவாரணம் தரும் இஞ்சி

நம்மில் பலர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நெஞ்செரிச்சல். ரொம்ப வேகமாக நகரும் இந்த காலகட்டத்தில் நாம் அதிகமாக பாஸ்ட் புட் உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அதனால் பலருக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் நோக்கி வருவதால் தான் இந்த நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இது சில பிரச்சினைகளுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். அதனால் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண்பது நல்லது. பொதுவாக இந்த நெஞ்சு எரிச்சல் உடல் பருமன், புகைப்பிடித்தல், … Read more

சாதாரண காய்ச்சல், தலைவலி கொரோனாவின் அறிகுறியா?.. கண்டுபிடிப்பது எப்படி?

கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரோனா தான். ஊரடங்கு, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் முற்றிலும் முடங்கி போய் இருந்தது. இப்போதுதான் மக்கள் அனைவரும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது பொதுமக்கள் பலரையும் பீதி அடைய வைத்துள்ளது. மேலும் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

தண்ணீர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரமாகும் அது ஒரு சிறப்பான பானம் இந்த தண்ணீர் தாகத்தை தணிப்பது மட்டுமல்லாமல் நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை சரி செய்வதற்கும் உதவுகிறது. அந்த வகையில் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். நம்மில் பலரும் வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அதற்கு இந்த தண்ணீர் மிகச்சிறந்த தீர்வை கொடுக்கக் கூடியது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் … Read more